Skip to main content
🌤️ —°C
வியாழன் | 20 ஆகஸ்ட் 2026 | 4 ஆவணி பராபவ வருடம்

எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு வாகனம்; மாதம் ரூ.2.05 லட்சம் வரை கிடைக்கும்: முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு

எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு வாகனம்; மாதம் ரூ.2.05 லட்சம் வரை கிடைக்கும்: முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு
தமிழக சட்டசபையில் விதி 110-ன் கீழ் முதல்-அமைச்சர் விஜய் 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் என்றும், அதன் பராமரிப்பு மற்றும் பயணச் செலவுகளுக்காக மாதந்தோறும் ரூ.75 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.சட்டசபை நேற்று கூடியதும், விதி 110-ன் கீழ் முதல்-அமைச்சர் சில அறிவிப்புகளை வெளியிட உள்ளதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய முதல்-அமைச்சர் விஜய், கடந்த 12-ந்தேதி காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ. ஜோதிமணி சட்டசபையில் பேசியதை சுட்டிக்காட்டினார்.பொருளாதார வசதி இல்லாத சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதிப் பணிகளை மேற்கொள்ள சொந்தமாக வாகனம் அல்லது உதவியாளரை வைத்துக்கொள்வதில் சிரமம் இருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக, அரசியல் அல்லது பொருளாதார பின்னணி இல்லாமல் மக்கள் ஆதரவுடன் முதன்முறையாக சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதாக விஜய் தெரிவித்தார்.தொகுதி மக்களின் குறைகளை நேரடியாகக் கேட்பதற்கும், அரசு நலத்திட்டங்கள் முறையாக சென்றடைவதை கண்காணிப்பதற்கும் எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து தொகுதி முழுவதும் பயணம் செய்ய வேண்டியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் என அவர் அறிவித்தார்.அரசு வழங்கும் வாகனத்துக்கான ஓட்டுநர், எரிபொருள் மற்றும் பராமரிப்புச் செலவுகளுக்காக மாதந்தோறும் ரூ.75 ஆயிரம் வாகனப் படியாக வழங்கப்படும். மேலும், அலுவலகப் பணிகளில் உதவியாளரை நியமித்துக்கொள்ள மாதம் ரூ.25 ஆயிரம் உதவியாளர் படியாக வழங்கப்படும் என்றும் விஜய் தெரிவித்தார். இதற்காக சம்பந்தப்பட்ட சட்டங்களில் திருத்தம் செய்து அரசாணைகள் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.இந்த நடவடிக்கை மூலம் பொருளாதார வசதி குறைந்த எம்.எல்.ஏ.க்கள் தங்களது தொகுதிகளில் உள்ள கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளுக்கு சுயமாகச் சென்று மக்களை சந்தித்து குறைகளை அறிந்து செயல்பட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் மொத்தம் 234 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
Advertisement
முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சபாநாயகருக்கு ஏற்கனவே அரசு சார்பில் இன்னோவா கார்கள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களைத் தவிர்த்து 199 எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு வாகனத்துக்கும் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை அரசு செலவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வாகனங்களை வாங்குவதற்கு சுமார் ரூ.30 கோடி வரை செலவாகும்.மேலும், எரிபொருள், ஓட்டுநர் சம்பளம், உதவியாளர் செலவு மற்றும் வாகனப் பராமரிப்பு உள்ளிட்டவற்றுக்காக 199 எம்.எல்.ஏ.க்களுக்கு மாதந்தோறும் சுமார் ரூ.2 கோடி செலவாகும். ஆண்டுக்கு இந்த செலவு சுமார் ரூ.24 கோடியாக இருக்கும். எம்.எல்.ஏ.க்களின் தற்போதைய தொகை தற்போது எம்.எல்.ஏ.க்களுக்கு அடிப்படை ஊதியமாக ரூ.30 ஆயிரமும், மாதாந்திர ஈட்டுப்படியாக ரூ.10 ஆயிரமும், வாகனப்படியாக ரூ.25 ஆயிரமும் வழங்கப்படுகிறது. இதன்மூலம் மாதத்திற்கு மொத்தம் ரூ.1.05 லட்சம் கிடைக்கிறது.இதுதவிர மருத்துவச் செலவுக்காக மாதம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது. சட்டசபை நடைபெறும் நாட்களுக்கான தனிப்படி மற்றும் மாலை நேரங்களில் நடைபெறும் சட்டசபைக் கூட்டங்களுக்கான கூடுதல் படியும் வழங்கப்படுகிறது. சட்டசபை கேன்டீனில் சைவம், அசைவம், தேநீர், காபி மற்றும் சிற்றுண்டி ஆகியவை இலவசமாக வழங்கப்படுகின்றன. சென்னையில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியில் இருந்து சட்டசபைக்கு செல்வதற்காக ஏசி பேருந்து வசதியும் உள்ளது.தற்போதைய அறிவிப்பின்படி ஓட்டுநர், உதவியாளர் மற்றும் எரிபொருள் உள்ளிட்ட செலவுகளுக்காக கூடுதலாகரூ.1லட்சம்வரைகிடைக்கஉள்ளது.இதனால்ஒருஎம்.எல்.ஏ.வுக்குமாதந்தோறும்ரூ.2.05லட்சம்வரைகிடைக்கும்எனதெரிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும், ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் ரூ.25 ஆயிரம் வாகனப் படி தொடர்ந்து வழங்கப்படுமா என்பது குறித்து நிதித்துறை முடிவு செய்யும் என கூறப்படுகிறது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு