Skip to main content
🌤️ —°C
வியாழன் | 30 ஜூலை 2026 | 14 ஆடி பராபவ வருடம்

இளைஞர்களின் எதிர்காலத்தை பாதிப்பவர்கள் தப்ப முடியாது; கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - பிரதமர் மோடி

இளைஞர்களின் எதிர்காலத்தை பாதிப்பவர்கள் தப்ப முடியாது; கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - பிரதமர் மோடி
'நீட்' தேர்வு முறைகேடு விவகாரத்தில் மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதே பிரச்சினையை முன்வைத்து, நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, 'நீட்' விவகாரம் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.இந்த சூழலில், 'நீட்' முறைகேடு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், நாட்டின் இளைஞர்களின் நலனும் அவர்களின் எதிர்காலமும் அரசுக்கு மிக உயர்ந்த முன்னுரிமை என குறிப்பிட்டுள்ளார்.
Advertisement
வினாத்தாள் கசிவு போன்ற சம்பவங்களில் தொடர்புடையவர்கள் மீது விரைவாகவும் கடுமையாகவும் நடவடிக்கை எடுக்க, விரைவு நீதிமன்றங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும், இதற்கான அனைத்து அவசியமான நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், மாணவர்களின் நலனையும் எதிர்காலத்தையும் பாதுகாக்க அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.இளைஞர்களின் எதிர்காலத்தை சீர்குலைக்க முயற்சிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என்றும் பிரதமர் மோடி தனது பதிவில் உறுதியாக தெரிவித்துள்ளார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு