Skip to main content
🌤️ —°C
வெள்ளி | 14 ஆகஸ்ட் 2026 | 29 ஆடி பராபவ வருடம்

“இயக்குநராக வேண்டும் என்பதுதான் என் சிறுவயது கனவு” – மனம் திறந்த ரவி மோகன்

“இயக்குநராக வேண்டும் என்பதுதான் என் சிறுவயது கனவு” – மனம் திறந்த ரவி மோகன்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கும் ரவி மோகன், ஜெயம், தனி ஒருவன், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல வெற்றிப் படங்கள் மூலம் ரசிகர்களிடையே தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுள்ளார். அண்மையில் வெளியான பராசக்தி திரைப்படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்த அவர், தனது வலுவான நடிப்புக்காக பாராட்டுகளைப் பெற்றார்.தற்போது கராத்தே பாபு, பென்ஸ், ப்ரோ கோட் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வரும் ரவி மோகன், தனது நீண்டகால இலக்கை நோக்கி மேலும் ஒரு முக்கியமான அடியை எடுத்துள்ளார். அதன்படி, 'ரவி மோகன் ஸ்டுடியோஸ்' என்ற பெயரில் புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.இந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகும் 'ஆன் ஆர்டினரி மேன்' திரைப்படத்தை அவரே இயக்கி வருகிறார். இதில் யோகி பாபு கதாநாயகனாக நடித்துவருவதால், ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.சமீபத்தில் அளித்த பேட்டியில், தனது இயக்குநர் பயணம் குறித்து பேசிய ரவி மோகன், யோகி பாபுவை மையமாகக் கொண்டு இயக்கும் தனது புதிய படம் இறைவன் அருளால் தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்.
Advertisement
மேலும், சிறுவயதிலிருந்தே சினிமா துறையில் கால்பதிக்க வேண்டும் என்பதே தனது மிகப்பெரிய கனவாக இருந்ததாக கூறினார்.அவர் மேலும் கூறியதாவது: “அந்தக் காலத்தில் நான் இயக்குநராக வருவேனா, நடிகராக மாறுவேனா அல்லது எடிட்டராகப் பணியாற்றுவேனா என்பது எனக்கே தெரியவில்லை. அதனால் திரைப்பட உருவாக்கத்தின் அனைத்து அம்சங்களையும் கற்றுக்கொள்ள முயன்றேன். ஆனால், என் மனம் எப்போதும் இயக்கத்தின் மீதே இருந்தது.நடிப்பு என்பது யாரும் கற்றுத்தரக்கூடிய விஷயம் அல்ல; அனுபவத்தின் மூலம் மட்டுமே அது வளர்கிறது. அதனால் எதிர்பாராத விதமாக நடிகராக என் பயணம் தொடங்கியது. நடிகராக கிடைத்த பயணம் சிறப்பாக தொடர்கிறது. தற்போது இயக்குநராக அறிமுகமாகும் இந்த புதிய அத்தியாயம் எனக்கு மிகுந்த உற்சாகத்தையும் புதுமையான அனுபவத்தையும் அளிக்கிறது. இந்தப் பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்” என்று ரவி மோகன் தெரிவித்துள்ளார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு