Skip to main content
🌤️ —°C
புதன் | 19 ஆகஸ்ட் 2026 | 3 ஆவணி பராபவ வருடம்

ஆண் வாரிசு இல்லாத நிலையில் தந்தையின் இறுதிச்சடங்கை செய்த 3 மகள்கள்

ஆண் வாரிசு இல்லாத நிலையில் தந்தையின் இறுதிச்சடங்கை செய்த 3 மகள்கள்
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் பாமர்ரு அரண்டல் பேட்டையைச் சேர்ந்தவர் பலகாணி வெங்கட் நாராயணா (65). மாரடைப்பு காரணமாக அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவருக்கு வெங்கட்ரமணா என்ற மனைவியும், ஜோதி, லதா, பிரசன்னா ஆகிய 3 மகள்களும் உள்ளனர்.மூன்று மகள்களுக்கும் திருமணமாகி, வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். தந்தையின் மரணச் செய்தி அறிந்ததும் அவர்கள் சொந்த ஊருக்கு வந்து இறுதிச்சடங்கு ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.பொதுவாக ஆண் வாரிசுகள் கொள்ளி வைப்பது உள்ளிட்ட இறுதிச்சடங்குகளை செய்வது வழக்கமாக இருந்து வரும் நிலையில், வெங்கட் நாராயணாவுக்கு மகன்கள் இல்லாததால் இறுதிச்சடங்கை யார் மேற்கொள்வது என்பது குறித்து உறவினர்கள் ஆலோசித்தனர்.அப்போது மகள்கள் லதா மற்றும் பிரசன்னா தங்களது தந்தையின் பாடையை சுமக்க முன்வந்தனர்.
Advertisement
தொடர்ந்து, மூத்த மகள் ஜோதி இந்து சம்பிரதாயப்படி தந்தைக்கு கொள்ளி வைத்து இறுதிச்சடங்கை நிறைவு செய்தார்.மகள்கள் மூவரும் தந்தைக்காக மேற்கொண்ட இந்த இறுதிச்சடங்கை பார்த்த உறவினர்கள் கண்கலங்கினர். அவர்களின் செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு