ஆடி மாதத்தில் வீசும் பலத்த காற்று; குமரியில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு
ஆடி மாதம் தொடங்கியுள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த காற்று வீசி வருவதால், ஆரல்வாய்மொழி மற்றும் முப்பந்தல் பகுதிகளில் அமைந்துள்ள காற்றாலைகளில் மின் உற்பத்தி கணிசமாக அதிகரித்துள்ளது.வழக்கமான காலத்தைவிட காற்றின் வேகமும் தீவிரமும் அதிகமாக இருப்பதால், 250 முதல் 750 கிலோவாட் திறன் கொண்ட காற்றாலைகளில் தினசரி மின் உற்பத்தி 3 ஆயிரம் முதல் 8 ஆயிரம் யூனிட் வரை உயர்ந்துள்ளது.
இதனால், முந்தைய மாதங்களுடன் ஒப்பிடும்போது உற்பத்தி இரண்டு மடங்கு வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் அவ்வப்போது பெய்து வரும் மழையின் காரணமாக காற்றாலை மின் உற்பத்தியில் சிறிய அளவில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.