ஆகஸ்ட் 9 முதல் தூத்துக்குடியில் சீரான குடிநீர் விநியோகம்: மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் ஆகஸ்ட் 9 முதல் வழக்கம்போல சீரான குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்படும் என்று மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.மாநகராட்சிக்கு குடிநீர் வழங்கும் வல்லநாடு தலைமை நீரேற்று நிலையம் அருகே நடைபெற்று வரும் குடிநீர் குழாய் சீரமைப்புப் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வல்லநாடு பகுதியில் நடைபெற்று வரும் குடிநீர் குழாய் சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறினார். பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை மாநகர மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.மேலும், சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த பிறகு, 2026 ஆகஸ்ட் 9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் தூத்துக்குடி மாநகராட்சியின் அனைத்து பகுதிகளுக்கும் மீண்டும் சீரான குடிநீர் விநியோகம் தொடங்கப்படும் என்று மேயர் உறுதியளித்தார்.இந்த ஆய்வின்போது தி.மு.க.
செயற்குழு உறுப்பினர் சி.எஸ். ராஜா, முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன், கவுன்சிலர்கள் சுரேஷ்குமார், கனகராஜ், முத்துவேல், மண்டலத் தலைவர் நிர்மல்ராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.