Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வியாழன் | 29 அக்டோபர் 2026 | 12 ஐப்பசி பராபவ வருடம்

ஹரிஷ் கல்யாணின் ‘நூறு கோடி வானவில்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஹரிஷ் கல்யாணின் ‘நூறு கோடி வானவில்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் ஹரிஷ் கல்யாண், சித்தி இட்னானி நடிப்பில் உருவாகியுள்ள ‘நூறு கோடி வானவில்’ திரைப்படம் வரும் நவம்பர் 6-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் முதல் பார்வை போஸ்டருடன் வெளியீட்டுத் தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு வெளியான ‘சிந்து சமவெளி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஹரிஷ் கல்யாண். தொடர்ந்து, ‘பிக்பாஸ் தமிழ்’ நிகழ்ச்சியின் முதல் சீசனில் வைல்ட்கார்டு போட்டியாளராகக் களமிறங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதன் பிறகு ‘பியார் பிரேமா காதல்’, ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’, ‘தாராள பிரபு’, ‘பார்க்கிங்’, ‘லப்பர் பந்து’, ‘டீசல்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். ‘பூ’, ‘பிச்சைக்காரன்’, ‘சிவப்பு மஞ்சள் பச்சை’, ‘நூறு சாமி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் சசி, ‘நூறு கோடி வானவில்’ படத்தை இயக்கியுள்ளார்.

Advertisement
இதில் ஹரிஷ் கல்யாண் நாயகனாகவும், சித்தி இட்னானி நாயகியாகவும் நடித்துள்ளனர். மாதவ் மீடியா மற்றும் அருண் அருணாச்சலம் புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன. சித்து குமார் இசையமைத்துள்ளார். இந்நிலையில், படத்தின் முதல் பார்வை போஸ்டரை நடிகர் விஜய் ஆண்டனி வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதனுடன், திரைப்படம் நவம்பர் 6-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது. திரையரங்குகளில் வெளியிடப்படாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள ‘நூறு கோடி வானவில்’ படத்தைக் காண ஹரிஷ் கல்யாணின் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,135
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு