ஹரிஷ் கல்யாணின் ‘நூறு கோடி வானவில்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
29 Oct 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 29 Oct 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ஹரிஷ் கல்யாணின் ‘நூறு கோடி வானவில்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஹரிஷ் கல்யாணின் ‘நூறு கோடி வானவில்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் ஹரிஷ் கல்யாண், சித்தி இட்னானி நடிப்பில் உருவாகியுள்ள ‘நூறு கோடி வானவில்’ திரைப்படம் வரும் நவம்பர் 6-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் முதல் பார்வை போஸ்டருடன் வெளியீட்டுத் தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு வெளியான ‘சிந்து சமவெளி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஹரிஷ் கல்யாண். தொடர்ந்து, ‘பிக்பாஸ் தமிழ்’ நிகழ்ச்சியின் முதல் சீசனில் வைல்ட்கார்டு போட்டியாளராகக் களமிறங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதன் பிறகு ‘பியார் பிரேமா காதல்’, ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’, ‘தாராள பிரபு’, ‘பார்க்கிங்’, ‘லப்பர் பந்து’, ‘டீசல்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். ‘பூ’, ‘பிச்சைக்காரன்’, ‘சிவப்பு மஞ்சள் பச்சை’, ‘நூறு சாமி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் சசி, ‘நூறு கோடி வானவில்’ படத்தை இயக்கியுள்ளார். இதில் ஹரிஷ் கல்யாண் நாயகனாகவும், சித்தி இட்னானி நாயகியாகவும் நடித்துள்ளனர். மாதவ் மீடியா மற்றும் அருண் அருணாச்சலம் புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன. சித்து குமார் இசையமைத்துள்ளார். இந்நிலையில், படத்தின் முதல் பார்வை போஸ்டரை நடிகர் விஜய் ஆண்டனி வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதனுடன், திரைப்படம் நவம்பர் 6-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது. திரையரங்குகளில் வெளியிடப்படாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள ‘நூறு கோடி வானவில்’ படத்தைக் காண ஹரிஷ் கல்யாணின் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.