Skip to main content
🌤️ —°C
வெள்ளி | 14 ஆகஸ்ட் 2026 | 29 ஆடி பராபவ வருடம்

வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள் என்னென்ன?
தமிழக அரசின் முதல் வேளாண் பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் விவசாயம், தோட்டக்கலை, நீர் மேலாண்மை, உயிர்ம வேளாண்மை, தொழில்நுட்பம், விவசாயிகளுக்கான ஊக்கத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு புதிய அறிவிப்புகள் இடம்பெற்றன. பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு, சட்டப்பேரவை வளாகத்தில் முதல்-அமைச்சர் விஜய் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சந்தித்து பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக் கொண்டனர். அதேவேளையில், வேளாண் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க திமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து அவைக்கு வந்தனர். பட்ஜெட் உரையை தொடங்கிய அமைச்சர் வினோத், விவசாயிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு இந்த நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், செயல்பாட்டில் உள்ள திட்டங்கள் தொடர்வதுடன் புதிய திட்டங்களும் அறிமுகப்படுத்தப்படுவதாகவும், வேளாண்மை வளர்ச்சியை மையமாகக் கொண்டு இந்த பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.இதற்கிடையில், முதல்-அமைச்சரை பாராட்டிய சில பகுதிகளை அமைச்சர் வாசித்தபோது எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையடுத்து, வேளாண் பட்ஜெட் அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்களை மட்டுமே வாசிக்குமாறு அமைச்சர் வினோத்துக்கு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவுறுத்தினார். வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய அறிவிப்புகள்: * தமிழ்நாடு மண்வள பாதுகாப்பு இயக்கம் செயல்படுத்த ரூ.122.51 கோடி ஒதுக்கீடு. * நெல் விதை உற்பத்தி மற்றும் விநியோக மானியத்திற்கான மாநில சிறப்பு திட்டத்திற்கு ரூ.34.72 கோடி. * ஒவ்வொரு உழவருக்கும் தனிப்பயன் சேவைகள் வழங்கும் ஏஐ அடிப்படையிலான உழவர் செயலி அறிமுகம்; ரூ.2 கோடி ஒதுக்கீடு. * உயிர்ம உரப் பயன்பாட்டை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு ரூ.4,000 சிறப்பு ஊக்கத்தொகை. * இலவச மின்சார திட்டத்திற்காக ரூ.7,432 கோடி நிதி. * உழவர் ஐடி பெற்ற 3 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.6 கோடியில் மண்வள அட்டைகள் வழங்கப்படும். * மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.36 கோடி. * காட்டுப்பன்றி சேதத் தடுப்பு திட்டத்திற்கு ரூ.7.35 கோடி. * தொழில்நுட்பம் மற்றும் பாரம்பரியத்தை இணைக்கும் வேளாண் கண்காட்சிக்கு ரூ.3 கோடி. * விளைபொருட்களை மழை மற்றும் வெயிலிலிருந்து பாதுகாக்க 43,500 தார்பாய்கள் வழங்க ரூ.10 கோடி. * சாமை, தினை, வரகு, குதிரைவாலி, பனிவரகு உள்ளிட்ட சிறுதானிய சாகுபடியை இருமடங்காக உயர்த்த தமிழ்நாடு குறுதானிய இயக்கம்; ரூ.7.61 கோடி. * கரும்பு சாகுபடி மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.9 கோடி. * மூன்று புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க ரூ.7.1 கோடி. * சிறந்த உயிர்ம விவசாயிகளுக்கான நம்மாழ்வார் விருது வழங்க ரூ.11 லட்சம். * தமிழ்நாடு தளிர்கீரைகள் திட்டம் செயல்படுத்த ரூ.1.20 கோடி. * மாடித்தோட்டம், நீரியல் தோட்டம், செங்குத்துத் தோட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு ரூ.10 கோடி. * வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம் திட்டத்திற்கு ரூ.10 கோடி. * மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் அஞ்சலை அம்மாள் விருது வழங்கப்படும்.
Advertisement
முதல் பரிசு ரூ.2.50 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.1.50 லட்சம், மூன்றாம் பரிசு ரூ.1 லட்சம். * பனை பாதுகாப்பு இயக்கத்திற்கு ரூ.2 கோடி. * பருத்தி மறுமலர்ச்சி இயக்கத்திற்குரூ.27.21 கோடி. * தமிழ்நாடு தென்னை பதப்படுத்தும் கழகத்திற்காக ரூ.5.30 கோடி. * வேளாண் காடுகள் திட்டத்திற்கு ரூ.17.70 கோடி. * அரசு தோட்டக்கலைப் பண்ணைகள் மேம்பாட்டிற்கு ரூ.2.3 கோடி. * துளித் துளித் தண்ணீர் நீர் மேலாண்மை திட்டத்திற்கு ரூ.785 கோடி. * 57 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவிலான வெங்காய சேமிப்புக் கிடங்குகள் அமைக்க ரூ.22 கோடி. * ஒன்பது முக்கிய பயிர்களில் அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு **'வெற்றி விவசாயி' விருது** வழங்கப்படும். மாவட்ட அளவில் 90 பரிசுகளுக்காக ரூ.67.50 லட்சம் ஒதுக்கீடு. * புளூபெரி, அவகாடோ, கிவி உள்ளிட்ட உயர்மதிப்புப் பழங்களின் உற்பத்தி அதிகரிக்க ரூ.1.87 கோடி. * 1,720 ஏக்கரில் மருத்துவப் பயிர்கள் சாகுபடி ஊக்குவிக்க ரூ.1.51 கோடி. * 100 சதவீத மானியத்தில் 500 பண்ணைக் குட்டைகள் அமைத்தல் மற்றும் 75 சதவீத மானியத்தில் மேலும் 500 குட்டைகள் தூர்வார ரூ.8.5 கோடி. * வேளாண் இயந்திர பராமரிப்பு மையங்கள் அமைக்க ரூ.1.12 கோடி. * இ-வாடகை 2.0 செயலி மூலம் 463 வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் கொள்முதல் செய்யப்படும். * 500 விவசாயிகளுக்கு ஆழ்துளை அல்லது குழாய்க் கிணறுகள் அமைக்க அதிகபட்சம் 60 சதவீத மானியத்துடன் ரூ.6 கோடி. * கடலோர மாவட்டங்களில் நன்னீர் கிணறுகள் அமைத்து மிளகாய் மற்றும் கொத்தமல்லி சாகுபடி ஊக்குவிக்க ரூ.49.4 லட்சம். * இரண்டு ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் சேமிப்புக் கிடங்குகள் அமைக்க ரூ.4.80 கோடி. * திருக்கோவிலூர், முசிறி, காரைக்குடி, தாராபுரம், கும்பகோணம் ஆகிய இடங்களில் புதிய வேளாண்மைப் பொறியியல் விரிவாக்க மற்றும் பயிற்சி மையங்கள் ரூ.4.6 கோடியில் அமைக்கப்படும். * உழவர் சந்தைகள் புனரமைப்பிற்கு ரூ.20 கோடி. * கியூஆர் கோடுடன் விதைச் சான்றிதழ் வழங்க ரூ.1 கோடி. * தஞ்சை மாவட்டம் சாக்கோட்டையில் நம்மாழ்வார் பெயரில் உயிர்ம வேளாண்மை பட்டயக் கல்லூரி அமைக்க ரூ.5 கோடி. * கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு ஆறு புதிய பேருந்துகள் வாங்க ரூ.3 கோடி. * ஊட்டியில் புதிய வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் அமைக்க ரூ.5 கோடி. * நீலகிரி தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தை மேம்படுத்த ரூ.10 கோடி. * சிறு பால்பண்ணைகள் அமைக்க ரூ.4.19 கோடி. * கிராமப்புற இளைஞர்கள் மற்றும் பெண்களுக்காக 50 சிறிய காளான் உற்பத்தி மையங்கள் அமைக்க ரூ.50 லட்சம். இறுதியாக, வேளாண் பட்ஜெட் அறிக்கையில் இடம்பெற்ற தகவல்கள் மட்டுமே அவைக் குறிப்பில் இடம்பெறும் என்றும், அறிக்கைக்கு வெளியான கருத்துகள் பதிவிலிருந்து நீக்கப்படும் என்றும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்தார். மேலும், சட்டப்பேரவை கூட்டம் நாளை காலை 9 மணிக்கு மீண்டும் கூடும் என்றும் அறிவிக்கப்பட்டது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு