Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
புதன் | 23 செப்டம்பர் 2026 | 7 புரட்டாசி பராபவ வருடம்

வரும் ஞாயிற்றுக்கிழமை பொதுத்துறை வங்கிகள் செயல்படும் என அறிவிப்பு

வரும் ஞாயிற்றுக்கிழமை பொதுத்துறை வங்கிகள் செயல்படும் என அறிவிப்பு

வங்கி வேலை நாட்களை வாரத்திற்கு 5 நாட்களாக குறைக்க வேண்டும், ஊக்கத்தொகைகளை அனைத்து ஊழியர்களுக்கும் சமமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் உள்ள தேசிய வங்கிகளின் அலுவலர்கள் மற்றும் ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி, வரும் செப்டம்பர் 28 முதல் 30-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த வேலைநிறுத்தத்தில் சுமார் 2.50 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், செப்டம்பர் 26-ம் தேதி மாதத்தின் 4-வது சனிக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த நாளான செப்டம்பர் 27 ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை என்பதால், வேலைநிறுத்தத்துடன் சேர்த்து தொடர்ந்து 5 நாட்கள் வரை வங்கி சேவைகள் பாதிக்கப்படும் நிலை உருவாகியது.

Advertisement
இந்த சூழலில், பொதுமக்களின் வங்கி பணிகள் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு, செப்டம்பர் 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று அனைத்து பொதுத்துறை வங்கிகள் மற்றும் மண்டல ஊரக வங்கிகளும் வழக்கம்போல் செயல்படும் என மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அதனை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,135
🥈 Silver ₹255.00
Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு