Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 07 நவம்பர் 2026 | 21 ஐப்பசி பராபவ வருடம்

நியூசிலாந்துக்கு எதிரான 2‍வது ஒருநாள் போட்டி ‍ - 4 ரன்கள் வித்தியாசத்தில் டிஎல்எஸ் முறையில் இந்தியா வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான 2‍வது ஒருநாள் போட்டி ‍ - 4 ரன்கள் வித்தியாசத்தில் டிஎல்எஸ் முறையில் இந்தியா வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி டக்வொர்த் லூயிஸ் (டிஎல்எஸ்) விதிப்படி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகித்தது. இதன் தொடர்ச்சியாக இரு அணிகளும் மோதிய 2-வது ஒருநாள் போட்டி வெலிங்டனில் உள்ள ஹென்றி மைதானத்தில் நடைபெற்றது. மழையின் காரணமாகப் போட்டி 47 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஷுப்மன் கில் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, இந்தியப் பந்துவீச்சாளர்களின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் 41 ஓவர்களில் 134 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் டேரில் மிட்செல் 55 ரன்களும், மிட்செல் சான்ட்னர் 31 ரன்களும் எடுத்தனர்.

Advertisement
இந்திய அணியின் குர்நூர் பிரார் சிறப்பாகப் பந்துவீசி 10 ஓவர்களில் 30 ரன்களை மட்டும் வழங்கி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதனைத் தொடர்ந்து 135 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் சாதகமாக அமையவில்லை. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்ததால் இந்திய அணி தடுமாறியது. 26 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது கே.எல்.ராகுல் 26 ரன்களுடனும், ஆக்கிப் நபி ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்திய அணியின் வெற்றிக்கு மேலும் 22 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மழை பெய்ததால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழை நீடித்ததால் டக்வொர்த் லூயிஸ் (டிஎல்எஸ்) விதிமுறைப்படி போட்டியின் முடிவு தீர்மானிக்கப்பட்டது. அதன்படி இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு