வரும் ஞாயிற்றுக்கிழமை பொதுத்துறை வங்கிகள் செயல்படும் என அறிவிப்பு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
23 Sep 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 23 Sep 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

வரும் ஞாயிற்றுக்கிழமை பொதுத்துறை வங்கிகள் செயல்படும் என அறிவிப்பு

வரும் ஞாயிற்றுக்கிழமை பொதுத்துறை வங்கிகள் செயல்படும் என அறிவிப்பு

வங்கி வேலை நாட்களை வாரத்திற்கு 5 நாட்களாக குறைக்க வேண்டும், ஊக்கத்தொகைகளை அனைத்து ஊழியர்களுக்கும் சமமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் உள்ள தேசிய வங்கிகளின் அலுவலர்கள் மற்றும் ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி, வரும் செப்டம்பர் 28 முதல் 30-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த வேலைநிறுத்தத்தில் சுமார் 2.50 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், செப்டம்பர் 26-ம் தேதி மாதத்தின் 4-வது சனிக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த நாளான செப்டம்பர் 27 ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை என்பதால், வேலைநிறுத்தத்துடன் சேர்த்து தொடர்ந்து 5 நாட்கள் வரை வங்கி சேவைகள் பாதிக்கப்படும் நிலை உருவாகியது. இந்த சூழலில், பொதுமக்களின் வங்கி பணிகள் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு, செப்டம்பர் 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று அனைத்து பொதுத்துறை வங்கிகள் மற்றும் மண்டல ஊரக வங்கிகளும் வழக்கம்போல் செயல்படும் என மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அதனை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.