Skip to main content
🌤️ —°C
புதன் | 29 ஜூலை 2026 | 13 ஆடி பராபவ வருடம்

வருகையில்லா ஆவணப்பதிவு குறித்து அமைச்சர் தலைமையில் ஆலோசனை; புதிய நடைமுறை விளக்கம்

வருகையில்லா ஆவணப்பதிவு குறித்து அமைச்சர் தலைமையில் ஆலோசனை; புதிய நடைமுறை விளக்கம்
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் த. லோகேஷ் தமிழ்செல்வன் தலைமையில், வருகையில்லா ஆவணப்பதிவு (Presenceless Registration) தொடர்பான செயல்முறை விளக்கக் கூட்டமும், பங்குதாரர்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் கலந்தாய்வும் வியாழக்கிழமை (23.07.2026) சென்னை ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள அம்மா மாளிகை கலையரங்கில் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் கட்டுமான நிறுவனங்கள், நில மேம்பாட்டாளர்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். புதிய பதிவு முறையின் செயல்பாடுகள் குறித்து செயல்விளக்கக் காட்சி (Demo) மூலம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டதுடன், நடைமுறையில் எழும் கேள்விகளுக்கும் விளக்கங்கள் வழங்கப்பட்டன.கூட்டத்தில் பேசிய அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன், மக்களின் தேவைகளை முன்னிறுத்தி அரசு பல்வேறு துறைகளில் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சேவைகளை எளிமைப்படுத்தி வருவதாக தெரிவித்தார். அந்த முயற்சியின் ஒரு பகுதியாக பதிவுத்துறையில் வருகையில்லா ஆவணப்பதிவு என்ற புதிய சீர்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்இந்த புதிய நடைமுறை முதல் கட்டமாக மனை முதல் விற்பனை மற்றும் அடுக்குமாடி குடியிருப்பின் முதல் விற்பனை ஆகிய இரண்டு வகை ஆவணப் பதிவுகளுக்கு 2026 ஆகஸ்ட் 17 முதல் கட்டாயமாக அமல்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.இந்த முறையின் மூலம் பதிவு செயல்முறை விரைவாகவும், வெளிப்படையாகவும், எளிமையாகவும் நடைபெறும் என்றும், பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் பாதுகாப்பான மின்னணு வடிவில் சம்பந்தப்பட்டவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
Advertisement
இதனால் பொதுமக்களின் நேரமும் பயணச் செலவும் குறைவதுடன், பதிவுச் சேவையின் தரமும் செயல்திறனும் மேம்படும் என்றார்.கட்டுமான நிறுவனங்கள், மேம்பாட்டாளர்கள் மற்றும் வங்கிகள் இந்த புதிய முறையில் முக்கிய பங்காற்ற உள்ளதால், தேவையான ஆவணங்கள், மின்னணு சமர்ப்பிப்பு முறை, பதிவு செயல்முறையின் ஒவ்வொரு கட்டம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இந்தப் பயிற்சியில் விளக்கங்கள் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதன் மூலம் பதிவுகளில் ஏற்படும் பிழைகள் குறைந்து, செயல்முறை மேலும் ஒழுங்குபடுத்தப்படும் என்றும் கூறினார்.மேலும், இந்தப் பயிற்சி புதிய நடைமுறையை முழுமையாகப் புரிந்துகொண்டு பொதுமக்களுக்கு விரைவான மற்றும் தரமான சேவையை வழங்க உதவும் என்றும், அரசின் பதிவுத்துறைக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.அரசின் இந்த முன்னோடியான முயற்சி வெற்றிகரமாக அமைய அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம் என வலியுறுத்திய அவர், ஆகஸ்ட் 17 முதல் அமலுக்கு வரும் புதிய நடைமுறையை சிறப்பாக செயல்படுத்த இன்றைய பயிற்சி உதவிகரமாக இருக்கும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார்.இந்தக் கூட்டத்தில் வணிகவரி, பதிவுத்துறை மற்றும் அறநிலையங்கள் துறைச் செயலாளர் ஜெ. குமரகுருபரன், பத்திரப் பதிவுத்துறை தலைவர் ஜி.கே. அருண் சுந்தர் தயாளன், கூடுதல் பதிவுத்துறை தலைவர்கள் மற்றும் பதிவுத்துறையின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு