Skip to main content
🌤️ —°C
சனி | 15 ஆகஸ்ட் 2026 | 30 ஆடி பராபவ வருடம்

லயோலா முன்னாள் மாணவர்கள் தினம்: நடிகர் சூர்யா உள்பட 12 பேருக்கு விருது

லயோலா முன்னாள் மாணவர்கள் தினம்: நடிகர் சூர்யா உள்பட 12 பேருக்கு விருது
லயோலா முன்னாள் மாணவர்கள் தினத்தை முன்னிட்டு, கல்லூரி வளாகத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. லயோலா முன்னாள் மாணவர்கள் சங்கத் தலைவர் ஜி. விஸ்வநாதன் வரவேற்புரை வழங்கினார்.நிகழ்ச்சியில் கல்லூரி துணைத்தலைவர் அந்தோணி ராபின்சன், 'ஜெசுட்' சென்னை மாகாணத் தலைவர் பிரிட்டோ வின்சென்ட், லயோலா முன்னாள் மாணவர்கள் சங்க துணைத்தலைவர் சேவியர் பிரிட்டோ, சென்னை கிளைத் தலைவர் கார்த்திக் சபாநாயகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.முன்னாள் மாணவர்கள் தினத்தை முன்னிட்டு 2026-ம் ஆண்டுக்கான பல்வேறு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. இதில் வழிகாட்டும் ஒளி விருதுகள் பென்ஜமின் செரியன் மற்றும் சி. ராஜ்குமார் ஆகியோருக்கும், வணிகத் தலைவர் விருதுகள் திலிப் ஆர். வெல்லோடி மற்றும் விஜய் சங்கர் ஆகியோருக்கும் வழங்கப்பட்டன.சிறந்த சேவைக்கான விருதுகள் ஐ.பி.எஸ்.
Advertisement
அதிகாரி எஸ். ஜெயக்குமார் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரி கேத்தரின் சரண்யா ஆகியோருக்கு வழங்கப்பட்டன. உலகளாவிய சிறப்பு விருதுகள் சால் பலூர் மற்றும் மொய்ன் பலூர் ஆகியோருக்கு வழங்கப்பட்டன.மேலும், தொழில்முறை சிறப்பு விருது சுந்தர் மனோகரனுக்கும், படைப்பாற்றல் சிறப்பு விருது நடிகர் சூர்யாவுக்கும் வழங்கப்பட்டது. விளையாட்டு சாதனையாளர் விருது விஜய் அமிர்தராஜுக்கும், லயோலா நண்பர்கள் விருது ரபீக் அகமதுவுக்கும்வழங்கப்பட்டது.இதன்மூலம்நடிகர்சூர்யாஉள்படமொத்தம்12பேர்விருதுகள்வழங்கிகவுரவிக்கப்பட்டனர்.நிகழ்ச்சியின் நிறைவில், லயோலா முன்னாள் மாணவர்கள் தினத் தலைவர் ராபின் எம்.ஏ. ஜேக்கப் நன்றியுரை வழங்கினார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு