Skip to main content
🌤️ —°C
சனி | 22 ஆகஸ்ட் 2026 | 6 ஆவணி பராபவ வருடம்

ராஜஸ்தான்: பள்ளியில் ஆய்வுக்கு சென்ற கரப்பான் ஜனதா கட்சியினர் மீது தாக்குதல்

ராஜஸ்தான்: பள்ளியில் ஆய்வுக்கு சென்ற கரப்பான் ஜனதா கட்சியினர் மீது தாக்குதல்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே கன்வார்புரா கிராமத்தில் உள்ள அரசு பள்ளியை ஆய்வு செய்யச் சென்ற கரப்பான் ஜனதா கட்சியினருக்கும், கிராம மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் கட்சியினர் வந்த கார் சேதப்படுத்தப்பட்டதுடன், சிலர் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சமூக வலைதளங்கள் மூலம் தொடங்கப்பட்ட கரப்பான் ஜனதா கட்சி, அரசு பள்ளிகளில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்து, குறைபாடுகளை வெளிப்படுத்தும் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் அசுதோஷ் ரங்கா உள்ளிட்டோர் கன்வார்புரா அரசு பள்ளிக்கு சென்றனர். தங்களை பள்ளியை ஆய்வு செய்ய வருமாறு கிராம மக்களே அழைத்ததாக கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், கட்சியினர் பள்ளிக்குள் சென்றபோது கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. பள்ளி சீரமைப்புக்காக ரூ.12 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருவதாக அவர்கள் தெரிவித்ததாக தெரிகிறது.இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
Advertisement
தொடர்ந்து, சிலர் கட்சியினர் மீது கற்களை வீசியதாகவும், இதில் அவர்கள் பயன்படுத்திய கார் சேதமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தங்கள் குழுவினர் தாக்கப்பட்டதாக கரப்பான் ஜனதா கட்சி குற்றம்சாட்டியுள்ளது.இந்த சம்பவத்துக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அபிஜித் தீப்கே கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், தாக்குதலுக்கு பா.ஜ.க.வினரே காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் ராஜஸ்தான் சட்டசபையிலும் எதிரொலித்தது. இதுதொடர்பாக ஆளும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.இதற்கிடையே, கரப்பான் ஜனதா கட்சியினரின் குற்றச்சாட்டை பா.ஜ.க. தரப்பு மறுத்துள்ளது. கட்சியினர் பள்ளிக்கு வந்ததற்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அவர்களை பள்ளிக்குள் அனுமதிக்கவில்லை என்றும் பா.ஜ.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு