மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு: காலை 11 மணி நிலவரம் என்ன?
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் என 5 முனைப் போட்டி நிலவுகிறது.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதையடுத்து, வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
முதற்கட்டமாக காலை 9 மணி நிலவரப்படி மதுராந்தகத்தில் 15.99 சதவீத வாக்குகளும், தாராபுரத்தில் 17.55 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தன.
இந்நிலையில், காலை 11 மணி நிலவரப்படி வெளியாகியுள்ள தகவலின்படி, மதுராந்தகத்தில் 35.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தாராபுரத்தில் 37.28 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதேபோல், புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி தொகுதியிலும் இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. அங்கு காலை 9 மணி நிலவரப்படி 19.20 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், காலை 11 மணி நிலவரப்படி 39.16 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
இந்த இடைத்தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் வரும் 9-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.