Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 06 அக்டோபர் 2026 | 20 புரட்டாசி பராபவ வருடம்

பண்டிகை காலத்தை முன்னிட்டு சிறப்பு ரெயில் அறிவிப்பு

பண்டிகை காலத்தை முன்னிட்டு சிறப்பு ரெயில் அறிவிப்பு

பண்டிகை காலத்தை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக சென்னை தாம்பரம் மற்றும் மேற்கு வங்காளத்தின் சந்திரகாச்சி இடையே சிறப்பு ரெயில் சேவை இயக்கப்பட உள்ளது.

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 06075 என்ற ரெயில் எண் கொண்ட தாம்பரம் - சந்திரகாச்சி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில், அக்டோபர் 13, 20 மற்றும் 27 ஆகிய தேதிகளில் (செவ்வாய்க்கிழமைகள்) தாம்பரத்தில் இருந்து இரவு 10.15 மணிக்குப் புறப்படும். இந்த ரெயில் மறுநாள் மாலை 6.30 மணிக்கு சந்திரகாச்சியை சென்றடையும். மொத்தம் 3 சேவைகள் இயக்கப்படுகின்றன.

Advertisement

இதன் மறுமார்க்கத்தில், 06076 என்ற ரெயில் எண் கொண்ட சந்திரகாச்சி - தாம்பரம் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில், அக்டோபர் 14, 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில் (புதன்கிழமைகள்) சந்திரகாச்சியில் இருந்து இரவு 9.30 மணிக்குப் புறப்படும். இந்த ரெயில் மூன்றாம் நாள் காலை 10.30 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். இந்த வழித்தடத்திலும் 3 சேவைகள் இயக்கப்பட உள்ளன.

இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,675
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு