யாரை நோக்கி நிவேதா பெத்துராஜின் பதிவு?... வைரலாகும் திருக்குறள் பகிர்வு
நடிகை நிவேதா பெத்துராஜ் சமூக வலைதளங்களில் பகிரும் பதிவுகள் அடிக்கடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அந்த வரிசையில், அவர் தற்போது பகிர்ந்துள்ள ஒரு திருக்குறள் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.2016-ஆம் ஆண்டு தினேஷ் நடித்த 'ஒருநாள் கூத்து' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமான நிவேதா பெத்துராஜ், மதுரையை பூர்விகமாகக் கொண்டவர். அதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினுடன்'பொதுவாக எம்மனசு தங்கம்' திரைப்படத்தில் நடித்தார்.
பின்னர் 'மென்டல் மதிலோ' திரைப்படம் மூலம் தெலுங்கு திரையுலகிலும் அறிமுகமான அவர், தொடர்ந்து ரவி மோகனுடன் 'டிக் டிக் டிக்', விஜய் ஆண்டனியுடன் 'திமிரு புடிச்சவன்', விஜய் சேதுபதியுடன் 'சங்க தமிழன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வரும் நிவேதா பெத்துராஜ், சமீபத்தில் தனது பக்கத்தில் திருவள்ளுவரின் திருக்குறள் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
"புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்கம் தரும்."(திருக்குறள் 183)
இந்தக் குறள், ஒருவர் இல்லாதபோது அவரைப் பற்றி தவறாகப் பேசிவிட்டு, நேரில் சந்திக்கும் போது வேறுபட்ட முகம் காட்டி நடப்பது மிகத் தாழ்வான செயல் என்பதை உணர்த்துகிறது.
இத்தகைய வாழ்க்கையை விட மரணமே மேல் என்றும், அதுவே அறநெறி கூறும் உயர்ந்த பயனை அளிக்கும் என்றும் அதன் பொருள் விளக்கப்படுகிறது.நிவேதா பெத்துராஜின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், இந்தக் குறளை அவர் யாரை மனதில் வைத்து பகிர்ந்தார் என்ற கேள்வியை எழுப்பி ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.