Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
புதன் | 23 செப்டம்பர் 2026 | 7 புரட்டாசி பராபவ வருடம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6,250 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6,250 கன அடியாக அதிகரிப்பு

சேலம் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள மேட்டூர் அணை, தமிழ்நாட்டின் முக்கிய அணைகளில் ஒன்றாகும். இந்த அணையின் மூலம் 12 மாவட்டங்களில் சுமார் 16.05 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையில் இருந்து திறக்கப்படும் நீர் டெல்டா பாசனம் மற்றும் மின் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 3,867 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6,250 கன அடியாக உயர்ந்துள்ளது.

Advertisement
இதனிடையே, டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 12,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரைவிட வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 83.67 அடியாக உள்ளது. அணையில் மொத்தம் 45.72 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,135
🥈 Silver ₹255.00
Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு