மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6,250 கன அடியாக அதிகரிப்பு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
23 Sep 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 23 Sep 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6,250 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6,250 கன அடியாக அதிகரிப்பு

சேலம் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள மேட்டூர் அணை, தமிழ்நாட்டின் முக்கிய அணைகளில் ஒன்றாகும். இந்த அணையின் மூலம் 12 மாவட்டங்களில் சுமார் 16.05 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையில் இருந்து திறக்கப்படும் நீர் டெல்டா பாசனம் மற்றும் மின் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 3,867 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6,250 கன அடியாக உயர்ந்துள்ளது. இதனிடையே, டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 12,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரைவிட வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 83.67 அடியாக உள்ளது. அணையில் மொத்தம் 45.72 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது.