Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
ஞாயிறு | 13 செப்டம்பர் 2026 | 28 ஆவணி பராபவ வருடம்

முதியோர் உதவித்தொகை 15-ந் தேதி உறுதியாக வழங்கப்படும் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி

முதியோர் உதவித்தொகை 15-ந் தேதி உறுதியாக வழங்கப்படும் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே காளியப்பம்பாளையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: முதல்-அமைச்சர் விஜய்யின் நேரடி கண்காணிப்பில் கல்வித்துறையின் அனைத்து திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்படும். தமிழ்நாட்டில் முதியோர் உதவித்தொகை நிறுத்தப்படவில்லை. சுமார் 5 லட்சம் பேருக்கு உதவித்தொகை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது. அதேபோல், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், கைம்பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகைகளும் சேர்த்து சுமார் 27 ஆயிரத்து 412 பேருக்கு இதுவரை வழங்கப்படாமல் உள்ளது.

Advertisement
இதுதொடர்பாக மத்திய அரசிடம் பரிந்துரை செய்துள்ளோம். தற்போது விடுமுறை நாட்கள் என்பதால், விநாயகர் சதுர்த்தி முடிந்த மறுநாள், அதாவது வருகிற 15-ந் தேதி, உதவித்தொகைகளை வழங்குவதற்கு உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். இடைத்தேர்தலை பொறுத்தவரை த.வெ.க. மிகப்பெரிய வெற்றியை பெறும். நாங்கள் எங்கு சென்றாலும் வெற்றிதான் கிடைக்கும். மற்ற தொகுதிகளுக்கான வழக்குகளில் வருகிற 28-ந் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. தீர்ப்பு கிடைத்ததும், தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட நாளில் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிடும். இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு