Skip to main content
🌤️ —°C
சனி | 01 ஆகஸ்ட் 2026 | 16 ஆடி பராபவ வருடம்

மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்காதீர்கள்; கிரிமினல் வழக்குகள் வேண்டாம் - மத்திய அரசுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் வேண்டுகோள்

மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்காதீர்கள்; கிரிமினல் வழக்குகள் வேண்டாம் - மத்திய அரசுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் வேண்டுகோள்
டெல்லியில் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யக் கூடாது என்றும், அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளார். டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நீட் தேர்வு முறைகேடுகள், வினாத்தாள் கசிவு ஆகியவற்றுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது மறைந்த தாயார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டதாக கூறப்பட்டது.இதையடுத்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செல்ஃபி வீடியோ வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி, தன்னைப் பற்றியும் தனது மறைந்த தாயாரைப் பற்றியும் அவதூறாக பேசிய மாணவர்களை மன்னிப்பதாக தெரிவித்தார். மேலும், அவதூறு வார்த்தைகள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றும், மாணவர்களை தண்டிப்பது, நீதிமன்ற வழக்குகளில் சிக்கவைத்தல் அல்லது சமூக ரீதியாக அவர்களைத் துன்புறுத்துவது எந்த தீர்வும் அல்ல என்றும் கூறினார். வழிதவறிய மாணவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் வழங்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டிருந்தார்.இந்தப் போராட்டத்தின் போது பிரதமருக்கு எதிராக அவதூறாக பேசியதாகக் கூறி, நோய்டாவைச் சேர்ந்த 15 வயது சிறுமி மீது 'ஜீரோ எப்.ஐ.ஆர்.' பதிவு செய்யப்பட்டது.
Advertisement
பின்னர் அந்த விவகாரம் பெரிதானதைத் தொடர்ந்து, அந்தச் சிறுமி வெளியிட்ட வீடியோவில், உணர்ச்சிவசப்பட்டு பேசியது தனது தவறு என்றும், அது தனது முதல் மற்றும் கடைசி தவறு என்றும் கூறி மன்னிப்பு கேட்டார். இதற்கிடையில், டெல்லி போராட்டங்களில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் குற்றப்பின்னணி இல்லாத இளைஞர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, மாநில அரசு சில வழக்குகளை வாபஸ் பெறும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.இந்தச் சூழலில் வெளியிட்டுள்ள தனது வீடியோவில் நடிகர் பிரகாஷ் ராஜ், இளைஞர்கள் தவறு செய்தால் அவர்களை அறிவுறுத்தி திருத்த வேண்டும்; காவல்துறை மூலம் கிரிமினல் வழக்குகள் பதிவு செய்து அவர்களைத் துன்புறுத்தக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.மேலும், நாட்டின் சீர்குலைந்த அமைப்பும், காவல்துறையின் அத்துமீறல்களும் இளைஞர்களிடம் விரக்தியை உருவாக்குகின்றன; அதற்கும் அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். மாணவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுப்பது அவர்களின் எதிர்காலம் மட்டுமல்லாமல், அவர்களின் குடும்பத்தினரின் வாழ்க்கையையும் பாதிக்கும் என்றும், அவர்கள் நாட்டின் குழந்தைகள் என்பதால் அன்புடனும் பொறுப்புடனும் அணுக வேண்டும் என்றும், அவர்களின் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் சீரழிக்காதீர்கள் என்றும் பிரதமர் மோடியின் கருத்தை மேற்கோள்காட்டி பிரகாஷ் ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு