Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 31 அக்டோபர் 2026 | 14 ஐப்பசி பராபவ வருடம்

மதுரை: சாமி தரிசனம் செய்ய வந்தபோது திடீரென தீப்பற்றி எரிந்த கார் – 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

மதுரை: சாமி தரிசனம் செய்ய வந்தபோது திடீரென தீப்பற்றி எரிந்த கார் – 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

மதுரையில் உள்ள பாண்டிகோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய காரில் வந்த 4 பேர், எதிர்பாராத விதமாக கார் தீப்பற்றி எரிந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சுரேஷ் (37), பாரதி (38), பிரகாஷ் (38), கிருஷ்ணன் (35) ஆகிய நான்கு நண்பர்களும் மதுரை பாண்டிகோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக காரில் புறப்பட்டு வந்தனர். காரை கிருஷ்ணன் ஓட்டிச் சென்றார். இவர்கள் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள தோப்பூர் நான்கு வழிச்சாலையில் பயணித்துக் கொண்டிருந்தபோது, காரின் முன்பக்கத்தில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. புகை அதிகரிப்பதைக் கவனித்த கிருஷ்ணன், உடனடியாக காரை தோப்பூர் பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரத்தில் நிறுத்தினார்.

Advertisement
தொடர்ந்து, காரில் இருந்த அனைவரையும் பாதுகாப்பாக கீழே இறங்கச் செய்தார். அடுத்த சில நிமிடங்களில் காரில் தீப்பற்றியதுடன், தீ வேகமாகப் பரவி வாகனம் முழுவதும் எரியத் தொடங்கியது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் திருப்பரங்குன்றம் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும், இந்த தீ விபத்தில் கார் முழுமையாக எரிந்து நாசமானது. அதிலிருந்த பொருட்களும் சேதமடைந்தன. காரில் பயணித்த நான்கு பேரும் முன்கூட்டியே வெளியேறியதால் உயிர் தப்பினர். இந்தச் சம்பவம் குறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார் தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,135
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு