Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
ஞாயிறு | 01 நவம்பர் 2026 | 15 ஐப்பசி பராபவ வருடம்

’நிச்சயம் மாற்றம் வரும்.. விரைவில் வரும்’ – கனிமொழி எம்.பி. உறுதி

’நிச்சயம் மாற்றம் வரும்.. விரைவில் வரும்’ – கனிமொழி எம்.பி. உறுதி

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு நிலைமை பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, தவெக அரசைக் கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், முன்னாள் அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய கனிமொழி, தவெக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகக் குற்றம்சாட்டினார். குழந்தைகளுக்குக்கூட பாதுகாப்பு வழங்க முடியாத நிலையில் ஆட்சி நடைபெறுவதாகவும், குற்றச் செயல்களில் ஈடுபட நினைப்பவர்கள் தவெகவில் இணைவதாகவும் அவர் விமர்சித்தார்.

Advertisement
மேலும், தவெகவுக்கு வாக்களித்த பெண்கள் தற்போது தங்களது முடிவை எண்ணி வருத்தப்படுவதாகவும், தவறான முடிவை எடுத்துவிட்டோம் என்ற எண்ணத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார். தமிழகப் பெண்கள் ஒன்றிணைந்து தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்யத் தொடங்கிவிட்டதாகக் குறிப்பிட்ட கனிமொழி, "நிச்சயம் மாற்றம் வரும். அந்த மாற்றம் விரைவில் வரும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,135
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு