Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 31 அக்டோபர் 2026 | 14 ஐப்பசி பராபவ வருடம்

கோவை மத்திய சிறை வளாகத்தில் இருந்து கைதி தப்பியோட்டம்

கோவை மத்திய சிறை வளாகத்தில் இருந்து கைதி தப்பியோட்டம்

கோவை மத்திய சிறை வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசாரின் கண்காணிப்பையும் மீறி, கைதி ஒருவர் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் அன்னூர் பகுதியைச் சேர்ந்த ராகவன் என்பவர் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி அவரை சிறையில் அடைப்பதற்காக கோவை மத்திய சிறைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். கோவை மத்திய சிறையில் இரண்டு அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Advertisement
இந்நிலையில், ராகவனை முதல் நுழைவு வாயிலில் இருந்து இரண்டாவது நுழைவு வாயிலுக்கு அழைத்துச் சென்றபோது, அவரது கையில் பூட்டப்பட்டிருந்த விலங்கை போலீசார் அகற்றியுள்ளனர். அந்தச் சமயத்தைப் பயன்படுத்திக் கொண்ட ராகவன், திடீரென அங்கிருந்து தப்பியோடினார். இதையடுத்து, தப்பிச் சென்ற கைதியைப் பிடிக்க பந்தயச்சாலை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,135
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு