Skip to main content
🌤️ —°C
வெள்ளி | 14 ஆகஸ்ட் 2026 | 29 ஆடி பராபவ வருடம்

மாணவர்களுடன் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றார் முதல்-அமைச்சர் விஜய்

மாணவர்களுடன் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றார் முதல்-அமைச்சர் விஜய்
போதைப்பொருள் இல்லாத பாதுகாப்பான தமிழகத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என முதல்-அமைச்சர் விஜய் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாநிலம் முழுவதும் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி நிகழ்ச்சிக்கு முதல்-அமைச்சர் விஜய் தலைமை தாங்கினார். நிகழ்ச்சிக்கு வந்த அவருக்கு காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அதனை சல்யூட் அடித்து முதல்-அமைச்சர் விஜய் ஏற்றுக்கொண்டார்.இதனைத் தொடர்ந்து விழா மேடைக்கு சென்ற முதல்-அமைச்சர், தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் ‘போதை மற்றும் புகையிலை இல்லா வளாகம்’ தொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்தார்.மேலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களை அழிக்கும் நடவடிக்கையும் அவரது முன்னிலையில் காணொளி வாயிலாக நடைபெற்றது. செங்கல்பட்டு, நெல்லை, கோவை, தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் அழிப்பு பணிகளை முதல்-அமைச்சர் விஜய் காணொளி மூலம் பார்வையிட்டார்.தொடர்ந்து, ‘போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ என்ற இயக்கத்தையும் முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.
Advertisement
பின்னர் மாணவர்களுடன் இணைந்து போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டார்.அப்போது மாணவர்கள், போதைப்பழக்கத்திற்கு ஆளாகாமல் இருப்பதுடன், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் தங்களால் முடிந்த முழுமையான பங்களிப்பை வழங்குவதாக உறுதியேற்றனர்.இதையடுத்து, மதுவிலக்கு பிரிவில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் விருதுகளை வழங்கி பாராட்டினார். மேலும், போதைப்பொருள் தடுப்பு மன்றங்களில் சிறப்பாக செயல்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் அவர் பரிசுகளை வழங்கினார்.முன்னதாக, கடந்த ஜூன் 26-ந்தேதி சென்னையில் நடைபெற்ற சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை மெரினா கடற்கரையில் முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். அந்த ஓட்டத்தில் பொதுமக்களுடன் இணைந்து அவரும் பங்கேற்று ஓடியது குறிப்பிடத்தக்கது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு