Skip to main content
🌤️ —°C
புதன் | 29 ஜூலை 2026 | 13 ஆடி பராபவ வருடம்

மகனை இழந்து துயரத்தில் குடும்பம்; திரைப்படத்திற்கு கண்ணீர் சிந்தும் ஆட்சியாளர்கள் என்ன பதில் சொல்வார்கள்? - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

மகனை இழந்து துயரத்தில் குடும்பம்; திரைப்படத்திற்கு கண்ணீர் சிந்தும் ஆட்சியாளர்கள் என்ன பதில் சொல்வார்கள்? - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக விசாரணைக்காக காவல்துறையினர் அழைத்துச் சென்ற இளைஞர் அருணாச்சலம் மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணை நடைபெறும் போது காவல்துறையினர் தாக்கியதன் விளைவாகவே அருணாச்சலம் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த சம்பவத்துக்கு காரணமான காவல் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து, சம்பவம் தொடர்பாக தென்பாகம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், தூத்துக்குடியில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் காவல்துறையினரின் தாக்குதலால் உயிரிழந்ததாகக் கூறப்படும் தகவல் மிகுந்த வேதனையை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.மேலும், தனது இறுதி தருணங்களில் காவல்துறையால் தனக்கு நேர்ந்த அநீதியை அருணாச்சலம் தானே கூறியிருப்பதைப் பார்க்கும்போது மனம் கலங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.காவல் மரணங்கள் நடைபெறும் ஒவ்வொரு முறையும், காவல்துறைக்கு பொறுப்பான முதல்-அமைச்சர் கடுமையான நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காக்கும் சூழல் தொடர்வதால் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடைபெறுகின்றன என்றும் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.அருணாச்சலத்தை இழந்து துயரத்தில் இருக்கும் அவரது குடும்பத்தினருக்கு, திரைப்படத்தை பார்த்து கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்றும் அவர் தனது பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு