Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 02 அக்டோபர் 2026 | 16 புரட்டாசி பராபவ வருடம்

பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள்: முதல்-அமைச்சர் விஜய் புகழ் வணக்கம்

பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள்: முதல்-அமைச்சர் விஜய் புகழ் வணக்கம்

பெருந்தலைவர் காமராஜரின் நினைவு நாளையொட்டி, முதல்-அமைச்சர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் அவருக்கு புகழ் வணக்கம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், எளிமையான வாழ்க்கை மற்றும் நேர்மையான நிர்வாகத்தின் மூலம் தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றவர் காமராஜர் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், கிராமங்கள் தோறும் பள்ளிகளைத் தொடங்கியதுடன், மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி கல்வி வளர்ச்சிக்கு முக்கிய அடித்தளத்தை அமைத்ததாகவும் விஜய் தெரிவித்துள்ளார்.

Advertisement
அதேபோல், பல பொதுத்துறை நிறுவனங்கள், அணைகள் மற்றும் நீர்ப்பாசனத் திட்டங்களை உருவாக்கி தொழில் மற்றும் வேளாண் துறைகளின் வளர்ச்சிக்கும் காமராஜர் பங்களித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். தன்னலமற்ற பொதுச்சேவைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த கர்மவீரர் காமராஜரின் தியாகத்தை நினைவுகூர்வதுடன், அவர் காட்டிய நல்ல பாதையில் தொடர்ந்து பயணிப்போம் என்றும் முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,640
🥈 Silver ₹240.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு