Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
புதன் | 28 அக்டோபர் 2026 | 11 ஐப்பசி பராபவ வருடம்

உளுந்தூர்பேட்டையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை: வியாபாரிகள் மகிழ்ச்சி

உளுந்தூர்பேட்டையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை: வியாபாரிகள் மகிழ்ச்சி

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வாரச்சந்தையில் ஒரே நாளில் சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனையாகியுள்ளன. இதனால் ஆடு வளர்க்கும் விவசாயிகளும் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம். தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இந்த வாரம் சந்தைக்கு வழக்கத்தைவிட அதிக எண்ணிக்கையில் ஆடுகள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டன. திருச்சி, சேலம், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான விவசாயிகளும் வியாபாரிகளும் சந்தையில் திரண்டனர். அதிகாலை 3 மணிக்குத் தொடங்கிய சந்தையில், ஆடுகளை வாங்குவதற்கு வியாபாரிகளிடையே போட்டி நிலவியது.

Advertisement
தீபாவளி பண்டிகைக்கான தேவை அதிகரித்திருந்ததால், சந்தை தொடங்கிய மூன்று மணி நேரத்திற்குள்ளேயே கொண்டுவரப்பட்ட ஆடுகளில் பெரும்பாலானவை விற்பனையாகின. இதன் மூலம் சுமார் ரூ.3 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது. சந்தைக்கு விற்பனைக்குக் கொண்டுவரப்பட்ட ஆடுகளின் எடை மற்றும் தரத்தைப் பொறுத்து விலை நிர்ணயிக்கப்பட்டது. ஒரு ஆடு குறைந்தபட்சம் ரூ.7,000 முதல் அதிகபட்சமாக ரூ.20,000 வரை விற்பனை செய்யப்பட்டது. வழக்கமான வாரங்களை விட தீபாவளியை முன்னிட்டு விற்பனை அதிகரித்ததுடன், குறுகிய நேரத்திலேயே கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெற்றதால் ஆடு வளர்ப்போர் மற்றும் வியாபாரிகள் உற்சாகமடைந்துள்ளனர். எதிர்பார்த்ததைவிட விற்பனை சிறப்பாக இருந்தது அவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,135
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு