Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 14 நவம்பர் 2026 | 28 ஐப்பசி பராபவ வருடம்

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்: கடைசி 2 போட்டிகளுக்கு இந்திய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர்

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்: கடைசி 2 போட்டிகளுக்கு இந்திய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர்

இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கடைசி இரண்டு ஆட்டங்களில் இந்திய அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாகப் பொறுப்பேற்க உள்ளார். இந்தத் தொடருக்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் முதல் மூன்று போட்டிகளுக்கு சுப்மன் கில் கேப்டனாகவும், ஸ்ரேயாஸ் ஐயர் துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், தொடரின் இறுதிக்கட்ட இரண்டு போட்டிகளிலும் அணியை வழிநடத்தும் வாய்ப்பு ஸ்ரேயாஸ் ஐயருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் மூன்று ஒருநாள் போட்டிகள் நவம்பர் 4, 7 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றன.

Advertisement
தொடர்ந்து நவம்பர் 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நான்காவது மற்றும் ஐந்தாவது போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த இரண்டு ஆட்டங்களும் நியூசிலாந்தின் மவுண்ட் மாங்கனுய் மைதானத்தில் நடத்தப்பட உள்ளன. டெஸ்ட் தொடருக்கான பயிற்சி மற்றும் தயாரிப்புகளில் கவனம் செலுத்துவதற்காக சுப்மன் கில் கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கவில்லை. இதன் காரணமாக, கேப்டன் பொறுப்பு ஸ்ரேயாஸ் ஐயரிடம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியின் துணைக் கேப்டனாக இஷான் கிஷன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு