Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 18 செப்டம்பர் 2026 | 2 புரட்டாசி பராபவ வருடம்

தென்காசி செல்லும் பயணிகள் கவனத்திற்கு.. திருவனந்தபுரம் - தாம்பரம் சிறப்பு ரெயில் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு

தென்காசி செல்லும் பயணிகள் கவனத்திற்கு.. திருவனந்தபுரம் - தாம்பரம் சிறப்பு ரெயில் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு

திருவனந்தபுரம் சென்டிரல் - தாம்பரம் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரெயிலின் சேவை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருவனந்தபுரம் சென்டிரலில் இருந்து தாம்பரத்திற்கு ஒவ்வொரு புதன்கிழமையும் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06110), செப்டம்பர் 23-ந் தேதி முதல் அக்டோபர் 28-ந் தேதி வரை மேலும் 6 சேவைகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தாம்பரத்தில் இருந்து திருவனந்தபுரம் சென்டிரலுக்கு ஒவ்வொரு வியாழக்கிழமையும் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06109), செப்டம்பர் 24-ந் தேதி முதல் அக்டோபர் 29-ந் தேதி வரை கூடுதலாக 6 சேவைகள் இயக்கப்பட உள்ளன.

Advertisement
இந்த ரெயிலுக்கான முன்பதிவும் தொடங்கியுள்ளது. இந்த சிறப்பு ரெயில் தமிழ்நாட்டில் செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, கொடை ரோடு, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு