Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 18 செப்டம்பர் 2026 | 2 புரட்டாசி பராபவ வருடம்

பல பேரை காலி செய்தவர்... கே.என்.நேரு மீது பல்வேறு குற்றசாட்டுகளை அடுக்கிய துரை வைகோ

பல பேரை காலி செய்தவர்... கே.என்.நேரு மீது பல்வேறு குற்றசாட்டுகளை அடுக்கிய துரை வைகோ

தி.மு.க. முதன்மைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு எம்.எல்.ஏ., திருச்சியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, துரை வைகோ எம்.பி. தி.மு.க.வை கடுமையாக விமர்சித்து வருவதாக கூறப்படுவது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த கே.என்.நேரு, துரை வைகோ என்ன பேசியுள்ளார் என்பது தனக்குத் தெரியாது என்றும், அவர் பிறப்பதற்கு முன்பே நடைபெற்ற மிசா கால சம்பவங்கள் குறித்து தற்போது பேசுவதாகவும் தெரிவித்தார். மேலும், மு.க.ஸ்டாலின் குறித்து பேசுவதற்கு துரை வைகோவுக்கு உரிமை இல்லை எனக் கூறிய கே.என்.நேரு, தனது தந்தை கோபக்காரர் என்றும், கட்சியில் வளர்ச்சி இல்லை என்றும், தன்னால் கட்சியை நடத்த முடியாது என்றும் துரை வைகோ தன்னிடம் கூறியதாக குறிப்பிட்டார். மேலும், தி.மு.க.வில் சேர விரும்புவதாகவும் அவர் தன்னிடம் தெரிவித்ததாக கே.என்.நேரு கூறினார். சிறுபிள்ளைத்தனமாக அதிகம் பேசுபவருக்கு எல்லாம் தன்னால் பதில் அளிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், கே.என்.நேருவின் விமர்சனங்களுக்கு துரை வைகோ பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது: தான் தி.மு.க.வில் இணைய விரும்பியதாக கே.என்.நேரு கூறுவது உண்மையல்ல என்றும், அது ஒரு கட்டுக்கதை என்றும் துரை வைகோ தெரிவித்தார். தனக்கு தனிப்பட்ட அரசியல் ஆசையோ, விருப்பமோ இல்லை என்றும் அவர் கூறினார். கலைஞர் காலத்தோடு தி.மு.க. முடிந்துவிட்டதாக தன்னிடம் கே.என்.நேரு தெரிவித்ததாகவும், மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் தெரியாது என்று கூறியவரும் அவர்தான் என்றும் துரை வைகோ குற்றம்சாட்டினார். மேலும், தி.மு.க.வில் பலரை அரசியலில் இருந்து ஒதுக்கியவர் கே.என்.நேரு என்றும் அவர் கூறினார்.

Advertisement
அன்பில் மகேஸ் தோல்வியடைந்ததற்கு நேருவே காரணம் என்றும், திருச்சியைச் சேர்ந்த தி.மு.க.வின் முக்கியப் புள்ளி உள்ளிட்ட தன்னுடன் இருந்த பலரையும் அவர் அரசியலில் இருந்து ஒதுக்கியதாகவும் துரை வைகோ குற்றம்சாட்டினார். உதயநிதியை வைத்து அரசியல் செய்ய முடியாது என்று கூறியவரும் கே.என்.நேருதான் எனத் தெரிவித்த துரை வைகோ, கூட்டணியில் இருந்த காலத்திலேயே தன்னைப் பற்றி தி.மு.க.வினர் அவதூறாக பேசியதாகக் கூறினார். தன்னை சிறுமைப்படுத்துவதையோ, பண்ணையார் பாணியிலான அரசியலையோ ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் துரை வைகோ தெரிவித்தார். தனிநபர் தாக்குதல்களுக்கு தான் அஞ்சமாட்டேன் என்றும், யாராலும் தன்னை மிரட்ட முடியாது என்றும் அவர் கூறினார். தனக்கும் பல விஷயங்கள் தெரியும் என்றும், அவற்றையெல்லாம் பேச வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் துரை வைகோ தெரிவித்தார். தான் அரசியலுக்கு வந்ததே எதிர்பாராத நிகழ்வு என்றும் அவர் கூறினார். நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன், சூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என தனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும், வேறு சின்னத்தில் போட்டியிட்டால் தி.மு.க.வினர் தங்களுக்கு ஒத்துழைக்க மாட்டார்கள் என கூறியதாகவும் தெரிவித்தார். அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது மேடையிலேயே இதுபோன்ற அழுத்தம் தனக்கு கொடுக்கப்பட்டதாகக் கூறிய துரை வைகோ, அன்றே எந்தச் சூழ்நிலையிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடப் போவதில்லை என தெரிவித்ததாகவும் கூறினார். தனது தந்தையின் விருப்பத்திற்காகவே அரசியலுக்கு வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு