திருவனந்தபுரம் சென்டிரல் - தாம்பரம் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரெயிலின் சேவை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருவனந்தபுரம் சென்டிரலில் இருந்து தாம்பரத்திற்கு ஒவ்வொரு புதன்கிழமையும் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06110), செப்டம்பர் 23-ந் தேதி முதல் அக்டோபர் 28-ந் தேதி வரை மேலும் 6 சேவைகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தாம்பரத்தில் இருந்து திருவனந்தபுரம் சென்டிரலுக்கு ஒவ்வொரு வியாழக்கிழமையும் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06109), செப்டம்பர் 24-ந் தேதி முதல் அக்டோபர் 29-ந் தேதி வரை கூடுதலாக 6 சேவைகள் இயக்கப்பட உள்ளன. இந்த ரெயிலுக்கான முன்பதிவும் தொடங்கியுள்ளது. இந்த சிறப்பு ரெயில் தமிழ்நாட்டில் செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, கொடை ரோடு, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.