தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை!
தூத்துக்குடி மாவட்டம் காமநாயக்கன்பட்டியில் உள்ள புகழ்பெற்ற பரலோக மாதா பேராலயத்தின் விண்ணேற்பு பெருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பார்கள்.
இந்த ஆண்டுக்கான விண்ணேற்பு பெருவிழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட் 14) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுகிறது.இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பின்னர் ஒரு சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.