Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
ஞாயிறு | 27 செப்டம்பர் 2026 | 11 புரட்டாசி பராபவ வருடம்

தூத்துக்குடியில் குறைந்த மீன் வரத்து: சீலா கிலோ ரூ.1,000-க்கு விற்பனை

தூத்துக்குடியில் குறைந்த மீன் வரத்து: சீலா கிலோ ரூ.1,000-க்கு விற்பனை

தூத்துக்குடி கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால், மீன்பிடி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்திற்கு மீன்களின் வரத்து வெகுவாக குறைந்ததுடன், விலையும் அதிகரித்துள்ளது. சீலா மீன் கிலோ ரூ.1,000 வரை விற்பனையானது. தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டு படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஏராளமான மீனவர்கள் வழக்கமாக ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். குறிப்பாக வாரந்தோறும் சனிக்கிழமைகளில் அதிக அளவிலான மீன்களுடன் படகுகள் கரை திரும்புவது வழக்கம். ஆனால், இந்த வாரம் கடல் பகுதியில் சூறைக்காற்று வீசியதால் பெரும்பாலான நாட்டு படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. நேற்று சில படகுகள் மட்டுமே கரை திரும்பின. மோசமான வானிலை காரணமாக அந்த படகுகளிலும் குறைந்த அளவிலேயே மீன்கள் கிடைத்தன. இதனால் திரேஸ்புரம் மீன் ஏலக்கூடத்திற்கு மீன் வரத்து கணிசமாக குறைந்தது. இதனிடையே, புரட்டாசி சனிக்கிழமை என்பதாலும், குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு ஏராளமானோர் மாலை அணிந்து விரதம் இருப்பதாலும் மீன் சந்தையில் பொதுமக்களின் வருகை வழக்கத்தைவிட சற்று குறைவாக இருந்தது.

Advertisement
இருப்பினும், மீன் வரத்து குறைவாக இருந்ததால் அசைவப் பிரியர்களும் வியாபாரிகளும் கிடைத்த மீன்களை வாங்குவதில் ஆர்வம் காட்டினர். விலை உயர்ந்தபோதிலும், குறைந்த அளவில் வந்த மீன்களை போட்டிபோட்டு ஏலம் எடுத்துச் சென்றனர். நேற்று சீலா மீன்களின் வரத்து மிகவும் குறைந்திருந்தது. கடந்த வாரம் கிலோ ரூ.1,200-க்கு விற்பனையான சீலா, தற்போது கிலோ ரூ.1,000 வரை விற்பனை செய்யப்பட்டது. மற்ற மீன்களின் விலையும் குறிப்பிடத்தக்க அளவில் இருந்தது. விளை மீன் கிலோ ரூ.600 வரையும், பாறை மீன் ரூ.450 வரையும், ஊழி மீன் ரூ.350 முதல் ரூ.450 வரையும், நண்டு ரூ.700 வரையும், சூறை மீன் ரூ.200 வரையும் விற்பனையானது. சாளை மீன்கள் வரத்து முற்றிலும் இல்லாத நிலையில், ஒரு கூடை ரூ.3,000 வரை விற்பனையானது. மீன்களின் வரத்து குறைந்திருந்தாலும், கிடைத்த மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,010
🥈 Silver ₹250.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு