Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
ஞாயிறு | 27 செப்டம்பர் 2026 | 11 புரட்டாசி பராபவ வருடம்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற நடவடிக்கை தேவை: இந்து முன்னணி மாநில தலைவர்*

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற நடவடிக்கை தேவை: இந்து முன்னணி மாநில தலைவர்*

ஈரோடு அருகே முள்ளாம்பரப்புவில் உள்ள தனியார் மண்டபத்தில் இந்து முன்னணியின் மாநில செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கூறியதாவது: ஈழத் தமிழரான சிவராசா அனோஜனுக்கு சவுதி அரேபியா நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. அவரை மீட்க மத்திய அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற ஐகோர்ட்டு உத்தரவை தமிழக அரசு தாமதமின்றி செயல்படுத்த வேண்டும். மேலும், அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு மாட்டிறைச்சி வழங்குவது தொடர்பாக தெரிவிக்கப்பட்ட கருத்து கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,010
🥈 Silver ₹250.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு