Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
ஞாயிறு | 27 செப்டம்பர் 2026 | 11 புரட்டாசி பராபவ வருடம்

வைரஸ் காய்ச்சல் பரவல்; எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 60 படுக்கைகளுடன் புதிய வார்டு திறப்பு

வைரஸ் காய்ச்சல் பரவல்; எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 60 படுக்கைகளுடன் புதிய வார்டு திறப்பு

சென்னையில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் 60 படுக்கைகள் கொண்ட காய்ச்சல் சிறப்பு வார்டு அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் வைரஸ் காய்ச்சல், டெங்கு, உண்ணி உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதன் தாக்கமாக, சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சலால் சிகிச்சை பெற வரும் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துள்ளது. இதனால் மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கடந்த 20-ந்தேதி வைரஸ் காய்ச்சல் பாதிப்புடன் சுமார் 30 குழந்தைகள் மட்டுமே சிகிச்சை பெற்று வந்த நிலையில், 23-ந்தேதி அந்த எண்ணிக்கை 58 ஆக உயர்ந்தது. தொடர்ந்து 24-ந்தேதி 78 குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

Advertisement
நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து, 80 குழந்தைகள் காய்ச்சல் பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து, மருத்துவமனை நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நாளை (திங்கட்கிழமை) 60 படுக்கைகளுடன் கூடிய காய்ச்சல் சிறப்பு வார்டு செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. புதிய சிறப்பு வார்டில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் டாக்டர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பணியில் இருப்பார்கள். மேலும், காய்ச்சல் சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,010
🥈 Silver ₹250.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு