Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 06 நவம்பர் 2026 | 20 ஐப்பசி பராபவ வருடம்

தீபாவளியை முன்னிட்டு இன்று ரேஷன் கடைகள் செயல்படும் – தமிழக அரசு அறிவிப்பு

தீபாவளியை முன்னிட்டு இன்று ரேஷன் கடைகள் செயல்படும் – தமிழக அரசு அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் இன்று (வெள்ளிக்கிழமை) செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுவாக தமிழகத்தில் செயல்படும் ரேஷன் கடைகளுக்கு மாதத்தின் முதல் மற்றும் இரண்டாவது வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதே நேரத்தில், முதல் மற்றும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமைகளில் கடைகள் வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், வரும் 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

Advertisement
இதையொட்டி, குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை சிரமமின்றிப் பெற்றுக்கொள்ளும் வகையில், நவம்பர் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான இன்று அனைத்து ரேஷன் கடைகளும் திறந்திருக்கும் என உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு