Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 28 செப்டம்பர் 2026 | 12 புரட்டாசி பராபவ வருடம்

தமிழ்த்தாய் வாழ்த்து தனித்தீர்மானம்: கமல்ஹாசன் வரவேற்பு

தமிழ்த்தாய் வாழ்த்து தனித்தீர்மானம்: கமல்ஹாசன் வரவேற்பு

தமிழக சட்டசபையில் நேற்று, அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசு, பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என வலியுறுத்தும் அரசினர் தனித்தீர்மானத்தை முதல்-அமைச்சர் விஜய் முன்மொழிந்தார். இந்த தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.இந்நிலையில், அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்ற இந்த தனித்தீர்மானத்தை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் வரவேற்றுள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில், அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவதாக பாடப்பட வேண்டும் என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார்.மேலும், மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காத இந்த அணுகுமுறை தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டும் என்றும் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,010
🥈 Silver ₹250.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு