Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
புதன் | 23 செப்டம்பர் 2026 | 7 புரட்டாசி பராபவ வருடம்

தமிழக அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: ரூ.1.73 கோடி பறிமுதல்

தமிழக அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: ரூ.1.73 கோடி பறிமுதல்

தமிழகம் முழுவதும் பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், கணக்கில் வராத ரூ.1.73 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தவெக அரசு அமைந்தது முதல் தமிழகத்தின் பல்வேறு துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் அவ்வப்போது சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுபோன்ற சோதனைகளில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், மாநகராட்சி, நகராட்சி, குடிநீர் வடிகால் வாரியம், வட்டாட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் உள்ளிட்ட 36 அரசு அலுவலகங்களில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

Advertisement
இந்த சோதனைகளில் கணக்கில் வராத ரூ.13 லட்சம் ரொக்கப் பணமும், ஜிபே மூலம் பெறப்பட்டதாக கூறப்படும் ரூ.1.59 கோடியும் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மூலம், 36 அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் மொத்தம் ரூ.1 கோடியே 73 லட்சத்து 48 ஆயிரத்து 666 மதிப்பிலான லஞ்சப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,135
🥈 Silver ₹255.00
Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு