தமிழ்நாட்டில் வேகமாக பரவும் பன்றிக்காய்ச்சல் - சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
இன்புளுவென்சா வைரஸ் மூலம் ஏற்படும் சுவாசத் தொற்று நோயான பன்றிக்காய்ச்சல், தற்போது மனிதர்களிடையே பரவி வருகிறது. ஆரம்பத்தில் பன்றிகளிடமிருந்து பரவிய இந்த நோய், பின்னர் மனிதர்களிடையே மனிதர்களுக்கு பரவும் தன்மை கொண்டதாக உள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்த நோய் பரவி வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டிலும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு வேகமாக உயர்ந்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.