தமிழ்நாட்டில் வேகமாக பரவும் பன்றிக்காய்ச்சல் - சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
26 Aug 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 26 Aug 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

தமிழ்நாட்டில் வேகமாக பரவும் பன்றிக்காய்ச்சல் - சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

தமிழ்நாட்டில் வேகமாக பரவும் பன்றிக்காய்ச்சல் - சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

இன்புளுவென்சா வைரஸ் மூலம் ஏற்படும் சுவாசத் தொற்று நோயான பன்றிக்காய்ச்சல், தற்போது மனிதர்களிடையே பரவி வருகிறது. ஆரம்பத்தில் பன்றிகளிடமிருந்து பரவிய இந்த நோய், பின்னர் மனிதர்களிடையே மனிதர்களுக்கு பரவும் தன்மை கொண்டதாக உள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்த நோய் பரவி வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டிலும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு வேகமாக உயர்ந்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஜனவரி மாதத்தில் 19 பேருக்கு மட்டுமே பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருந்த நிலையில், தற்போது பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 339 ஆக அதிகரித்துள்ளது.திடீரென அதிக காய்ச்சல், இருமல், தொண்டை வலி, உடல் மற்றும் தசை வலி, மூட்டு வலி, தலைவலி, கடுமையான சோர்வு, குளிர் நடுக்கம், மூச்சுத் திணறல், சுவாசிப்பதில் சிரமம், நெஞ்சு வலி உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால், பொதுமக்கள் தாமதிக்காமல் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.