Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
ஞாயிறு | 11 அக்டோபர் 2026 | 25 புரட்டாசி பராபவ வருடம்

மதுரை, கோவை மெட்ரோ ரெயில் திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” – பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் கோரிக்கை

மதுரை, கோவை மெட்ரோ ரெயில் திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” – பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் கோரிக்கை

சென்னை ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக முதல்-அமைச்சர் விஜய், மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரெயில் திட்டங்களை மறுபரிசீலனை செய்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்தார். மேலும், மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்படும்போது, அதன் பயன்கள் மக்களை நேரடியாகச் சென்றடைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். சென்னை ஐஐடியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதில் ரூ.3,700 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களும் அடங்கும். மேலும், சுமார் ரூ.750 கோடி மதிப்பிலான ரெயில்வே திட்டங்களைத் தொடங்கி வைத்ததுடன், புனரமைக்கப்பட்ட 5 ரெயில் நிலையங்களையும் திறந்து வைத்தார். விழா தொடங்கியதும் முதலில் தேசிய கீதமும், தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டன. நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் விஜய், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர் என்.ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் பேசியதாவது: பூந்தமல்லி–வடபழனி இடையிலான மெட்ரோ ரெயில் சேவையைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தொன்மையான பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் போற்றி பாதுகாத்து வரும் தமிழ்நாட்டின் சார்பில் பிரதமரை வரவேற்கிறேன். கல்வி, வேளாண்மை, திருநர் நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அனைத்து தரப்பு மக்களின் முன்னேற்றத்தையும் இலக்காகக் கொண்டு எங்கள் அரசு செயல்பட்டு வருகிறது.

Advertisement
இந்தியாவின் வளர்ச்சிக்கு தமிழ்நாடு எப்போதும் உறுதுணையாக இருக்கும். மத்திய அரசும் மாநில அரசும் ஒருங்கிணைந்து செயல்படும்போது, அதன் பலன்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் நேரடியாகத் தெரிய வேண்டும் என்பதே எங்களது அணுகுமுறை. சென்னையின் வளர்ச்சியோடு நின்றுவிடாமல், தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வளர்ச்சியின் பயன்களைக் கொண்டு செல்ல வேண்டும். இளைஞர்கள் நாட்டின் பெரும் வளம் என்பதால், அவர்களின் முன்னேற்றத்துக்கு உதவும் வகையில் திட்டங்கள் அமைய வேண்டும். சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் மூன்றாம் கட்டப் பணிகள், ஓசூர்–பெங்களூரு திட்டம் மற்றும் கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்கள் ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளித்து, அவற்றைச் செயல்படுத்த வேண்டும். குறிப்பாக, கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும். சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை முதன்மையான வழக்காடு மொழியாக்கக் கோரி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு விரைவாக ஒப்புதல் வழங்க வேண்டும். மேலும், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ.5,110 கோடி நிலுவைத் தொகையை எந்தவித நிபந்தனையும் இன்றி மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்று முதல்வர் விஜய் வலியுறுத்தினார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,710
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு