Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 19 செப்டம்பர் 2026 | 3 புரட்டாசி பராபவ வருடம்

தமிழ்நாட்டில் புதிதாக 7 நர்சிங் கல்லூரிகள்: கூடுதல் இடங்கள் உருவாக்கம்

தமிழ்நாட்டில் புதிதாக 7 நர்சிங் கல்லூரிகள்: கூடுதல் இடங்கள் உருவாக்கம்

தமிழ்நாட்டில் புதிதாக 7 அரசு நர்சிங் கல்லூரிகளை தொடங்குவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் செவிலியர் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளில் ஆயிரக்கணக்கான கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்கள் உருவாக உள்ளன. தமிழ்நாட்டில் கடந்த 2014-ம் ஆண்டுக்குப் பிறகு புதிய அரசு நர்சிங் கல்லூரிகள் தொடங்கப்படவில்லை. இந்த நிலையில், செவிலியர், மருந்தியல் மற்றும் துணை மருத்துவப் படிப்புகளில் ரூ.351 கோடி செலவில் கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்களை உருவாக்கும் அறிவிப்பை முதல்-அமைச்சர் விஜய் சட்டசபையில் வெளியிட்டிருந்தார். இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, நாமக்கல், திருச்சி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை மற்றும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 100 பி.எஸ்சி. செவிலியர் மாணவர் சேர்க்கை இடங்களுடன் 6 புதிய அரசு நர்சிங் கல்லூரிகள் தொடங்கப்படுகின்றன. இதற்காக ரூ.270.26 கோடி செலவிடப்படுகிறது. இந்த தொகை முழுவதும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக நிதியில் இருந்து வழங்கப்படுகிறது.

Advertisement
இந்த 6 கல்லூரிகளிலும் சேர்த்து 600 இடங்களுக்கு, அந்தந்த அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஏற்கெனவே உள்ள கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்தி நடப்பு கல்வியாண்டிலேயே மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. மேலும், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 60 பி.எஸ்சி. செவிலியர் இடங்களுடன் 7-வது புதிய அரசு நர்சிங் கல்லூரியும் தொடங்கப்படுகிறது. இதுதவிர, ஏற்கெனவே செயல்பட்டு வரும் அரசு நர்சிங் கல்லூரிகள் மற்றும் நர்சிங் பள்ளிகளில் கூடுதலாக 1,925 இடங்கள் உருவாக்கப்படுகின்றன. மொத்தமாக டி.ஜி.என்.எம். படிப்பில் 1,290 இடங்கள், பி.எஸ்சி. நர்சிங் படிப்பில் 440 இடங்கள், எம்.எஸ்சி. நர்சிங் படிப்பில் 75 இடங்கள், பட்டப்படிப்புக்குப் பிந்தைய பி.எஸ்சி. நர்சிங் படிப்பில் 120 இடங்கள் என 2,585 கூடுதல் நர்சிங் மாணவர் சேர்க்கை இடங்கள் உருவாக்கப்படுகின்றன. இதேபோல், 12 வகையான துணை மருத்துவப் படிப்புகளில் 2,788 கூடுதல் இடங்களும், மருந்தியல் படிப்புகளில் 735 கூடுதல் இடங்களும் உருவாக்கப்பட உள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு