Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 14 நவம்பர் 2026 | 28 ஐப்பசி பராபவ வருடம்

தந்தைக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிய ஆர்யவீர் சேவாக்... 160 ரன்கள் குவித்து அபாரம்

தந்தைக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிய ஆர்யவீர் சேவாக்... 160 ரன்கள் குவித்து அபாரம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக்கின் மகன் ஆர்யவீர் சேவாக், 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தனது அதிரடி பேட்டிங்கால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடிய அவர், 160 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு வலுசேர்த்தார். இந்தப் போட்டியில் 168 பந்துகளை எதிர்கொண்ட ஆர்யவீர், 17 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 160 ரன்கள் எடுத்தார். இளையோர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அவர் பதிவு செய்த முதல் சதம் இதுவாகும். போட்டிக்கு முன்னதாகவே தனது தந்தை வீரேந்திர சேவாக்கிடம் அதிக ரன்கள் எடுப்பதாக உறுதியளித்திருந்ததாக ஆர்யவீர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "இந்தப் போட்டியில் பெரிய அளவில் ரன்கள் சேர்க்க வேண்டும் என்று விரும்பினேன். அதற்காக ஒருவரிடம் வாக்குறுதி அளித்திருந்தேன். அவர் எனது தந்தைதான். அவரிடம் பெரிய சதம் அடிப்பேன் என்று கூறியிருந்தேன். அவருக்கு பெரிய சதங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். எனவே, அவரது கிரிக்கெட் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது" என்றார்.

Advertisement
ஆட்டத்தின் தொடக்கத்தில் ஆர்யவீர் நிதானமான அணுகுமுறையைக் கடைப்பிடித்தார். ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்ததால், அவசரமாக ரன்களைக் குவிக்காமல் நீண்ட நேரம் களத்தில் நிலைத்து நின்று விளையாட முடிவு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார். ஆர்யவீரின் 160 ரன்கள் மற்றும் வி.கே. வினீத்தின் 67 ரன்கள் உதவியுடன் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் எடுத்தது. 69 பந்துகளைச் சந்தித்த வினீத் தனது பங்கிற்கு 67 ரன்கள் சேர்த்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு இந்த இருவரும் இணைந்து 193 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 310 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஐக்கிய அரபு அமீரக அணி, இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 239 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியின் இஷான் சூட் சிறப்பாகப் பந்துவீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன் மூலம் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கும் இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு