தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,320 அதிரடி உயர்வு... இன்றைய நிலவரம் என்ன?
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

03 Sep 2026 www.thinathulir.com

தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,320 அதிரடி உயர்வு... இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,320 அதிரடி உயர்வு... இன்றைய நிலவரம் என்ன?

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், இன்று திடீரென விலை உயர்ந்துள்ளது.சென்னையில் நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.14,175-க்கும், ஒரு சவரன் ரூ.1,13,400-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று அதன் விலை சவரனுக்கு ரூ.1,800 குறைந்து ரூ.1,11,600-ஆகவும், கிராமுக்கு ரூ.225 குறைந்து ரூ.13,950-ஆகவும் இருந்தது.இந்த நிலையில், இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் சவரனுக்கு ரூ.2,320 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் ரூ.1,13,920-க்கும், ஒரு கிராம் ரூ.14,240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு இன்று ரூ.290 உயர்வு ஏற்பட்டுள்ளது.வெள்ளியின் விலையும் இன்று அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 உயர்ந்து ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 உயர்ந்து ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.