Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 10 அக்டோபர் 2026 | 24 புரட்டாசி பராபவ வருடம்

விமானத்தில் வைத்தே சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே கைது

விமானத்தில் வைத்தே சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே கைது

சிஜேபி கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கேவை, டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்திற்குள் சென்று போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருடன் கட்சியைச் சேர்ந்த சௌரவ் தாஸ், அசுதோஷ் ரன்கா ஆகியோரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் தன்னிச்சையாகச் செயல்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நடவடிக்கையால் 13 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்கும் உரிமையை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாகக் கூறும் எதிர்க்கட்சியினர், அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். முன்னதாக, நீட் விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரும் தற்போது இந்த விவகாரத்தில் களமிறங்கியுள்ளனர். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, டெல்லி ஜந்தர் மந்தரில் சனிக்கிழமையான இன்று போராட்டம் நடத்த அவர்கள் திட்டமிட்டிருந்தனர். டெல்லியில் பலத்த பாதுகாப்பு போராட்டத்தைக் கட்டுப்படுத்தவும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும் டெல்லி காவல்துறையினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். சிங்கு, திக்ரி, காசிப்பூர் உள்ளிட்ட முக்கிய எல்லைப் பகுதிகளில் 25,000 போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், போராட்டக்காரர்களின் நடமாட்டத்தைக் கண்காணித்து அசம்பாவிதங்களைத் தடுக்க எல்லைப் பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட நவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

Advertisement
தடையை மீறி டெல்லிக்குள் நுழைய முயற்சிப்பவர்களைத் தற்காலிகமாகத் தடுத்து வைப்பதற்காக நகரின் பல்வேறு இடங்களில் 12 தற்காலிகக் காவல் மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. எல்லைப் பகுதிகளில் சிமென்ட் தடுப்புகள், இரும்பு ஆணிகள், முள்வேலிகள் ஆகியவை அமைக்கப்பட்டு சாலைகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. விமானத்திற்குள் சென்று கைது இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து இளைஞர்களும் சிஜேபி ஆதரவாளர்களும் டெல்லி ஜந்தர் மந்தரை நோக்கி வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட முயன்ற 1,000-க்கும் மேற்பட்ட சிஜேபி ஆதரவாளர்களை டெல்லி போலீசார் கைது செய்தனர். தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்தப்போவதாக அபிஜித் தீப்கே ஏற்கெனவே அறிவித்திருந்தார். இதற்காக அவர் மும்பையிலிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு வந்தார். விமானம் டெல்லியில் தரையிறங்கியதும், காவல்துறையினர் விமானத்திற்குள் நுழைந்து அபிஜித் தீப்கே உள்ளிட்ட மூவரையும் கைது செய்தனர். பயணிகள் அமர்ந்திருந்த இருக்கைகளுக்கு இடையே சென்று அவர்களை போலீசார் கைது செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முறையாக விண்ணப்பித்து அனுமதி பெறாததால், டெல்லியில் சிஜேபி கட்சியின் போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர். இந்தத் தடையை மீறி போராட்டத்தில் பங்கேற்க வந்ததால் அபிஜித் தீப்கே கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,710
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு