சையத் முஷ்சையத் முஷ்டாக் அலி டிராபி: கேரள அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமனம்டாக் அலி டிராபி: கேரள அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமனம்
சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ள கேரள அணிக்கு கேப்டனாக இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால், இந்தத் தொடரில் கேரள அணியின் தலைமைப் பொறுப்பை அவர் ஏற்கவுள்ளார். இத்தொடருக்கான 18 வீரர்கள் அடங்கிய பட்டியலை கேரள கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ளது. இந்திய அணிக்காக சர்வதேசப் போட்டிகளில் விளையாடி வரும் சஞ்சு சாம்சன், தற்போது கிடைத்துள்ள ஓய்வு நேரத்தில் தனது சொந்த மாநில அணிக்காகக் களமிறங்க உள்ளார். கடந்த சீசனிலும் கேரள அணியின் கேப்டனாகப் பணியாற்றிய சஞ்சு சாம்சன், இந்த முறையும் அதே பொறுப்பைத் தொடர்கிறார். முந்தைய தொடரில் 6 இன்னிங்ஸ்களில் விளையாடிய அவர், மொத்தம் 233 ரன்கள் சேர்த்திருந்தார்.