Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
புதன் | 21 அக்டோபர் 2026 | 4 ஐப்பசி பராபவ வருடம்

சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை.. அதிகபட்ச மழைப்பதிவு எந்த பகுதியில்..

சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை.. அதிகபட்ச மழைப்பதிவு எந்த பகுதியில்..

சென்னையில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் இடைவிடாமல் கனமழை பெய்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக எம்.ஜி.ஆர் நகரில் 15 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழ்நாடு கடலோரப் பகுதியில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கத்தால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 26-ம் தேதி வரை, அதாவது இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு, கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 23-ம் தேதி வங்கக்கடலில் மற்றொரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் வாய்ப்பும் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
இதற்கிடையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் விட்டு விட்டு கனமழை பெய்தது. தொடர்ந்து கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவில் எம்.ஜி.ஆர் நகரம் 15 செ.மீயுடன் முதலிடத்தில் உள்ளது. வடபழனியில் 14 செ.மீ மழையும், சைதாப்பேட்டை, ஆலந்தூர் மற்றும் காஞ்சி கொளப்பாக்கத்தில் தலா 13 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. அதேபோல், மீனம்பாக்கம், மடிப்பாக்கம், வளசரவாக்கம், நுங்கம்பாக்கம், மதுரவாயல் மற்றும் குமரி குளச்சல் பகுதிகளில் தலா 12 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,490
🥈 Silver ₹240.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு