சென்னையில் கஞ்சா விற்பனை: வடமாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் கைது, 15 கிலோ கஞ்சா பறிமுதல்
சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் கஞ்சா மற்றும் பிற போதைப்பொருட்களின் பயன்பாடு, விற்பனையை கட்டுப்படுத்த போலீசார் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில், சென்னை கோவிலம்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த பகுதியில் போலீசார் இன்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு கும்பல் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, திரிபுராவைச் சேர்ந்த சபியுல் இஸ்லாம் (18) உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 15 கிலோ கஞ்சா மற்றும் 6 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்த கஞ்சா கடத்தல் மற்றும் விநியோகத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் துஷார் உசேனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.